சிவப்பு அணுக்கள் (ஹீமோகுளோபின்) பற்றி அறிந்து கொள்வோம்
ஹீமோகுளோபின், அல்லது ஈமோகுளோபின் அல்லது குருதிவளிக்காவி (Hemoglobin) என்பது மனிதனதும் இதர முதுகெலும்பிகளினதும் சில முதுகெலும்பிலிகளினதும் குருதியில் உள்ள ஒரு முக்கிய கூறு ஆகும்.
இது செங்குருதியணுக்களில் உள்ள இரும்பு தனிமத்தைக் கொண்ட ஆக்சிசன் கடத்தும் உலோகப் புரதத்தைக் குறிக்கிறது.
ஆக்சிசனுடன் இணைந்த நிலையில் அதற்கு *ஆக்சி ஹீமோகுளோபின்* என்று பெயர்.
இது உடலில் குறிப்பிட்ட அளவில் பேணப்படுதுவது உடல்நலத்துக்கு அவசியம். இது குருதிப் புரதங்களில்மிக முக்கியமான புரதமாகும்.
நமது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் 90 முதல் 120 நாட்கள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டது.
இந்த சிவப்பணுக்கள் ஆண்களுக்கு 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும்.
8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.
ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும்.
ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது.
பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்சைடாக ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது.
பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது.
மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு 15 மி.கி.க்கு மேல் இருக்க வேண்டும்.
சாதாரணமாக குழந்தைகள் உடலில் ரத்தத்தில் 16 முதல் 18 மில்லி கிராம், ஆண்களுக்கு 12 முதல் 14 மில்லி கிராம், பெண்களுக்கு 10 முதல் 14 மில்லி கிராம் "ஹீமோகுளோபின்" இருக்க வேண்டும்.
பத்து மில்லி கிராமுக்கு கீழே ரத்தத்தில் ஹீமோக்ளோபின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது வைத்தியர் பரிந்துரையாகும்.
Translate
Hemoglobin, or hemoglobin or hemoglobin, is an important component in the blood of humans and other vertebrates and some vertebrates.
It refers to the oxygen-carrying metal protein containing the iron element in red blood cells.
When combined with oxygen it is called * oxy hemoglobin *.
It is essential for good health to maintain a certain level in the body. It is the most important protein in the blood.
The red cells or hemoglobin in our blood have a lifespan of 90 to 120 days.
These red blood cells should be in the range of 14 - 18 grams for men and 12 - 16 grams for women.
When it drops below 8 grams, the chances of developing anemia and other serious illnesses increase.
The amount of hemoglobin in the blood is determined by a blood test on the test site.
When the hemoglobin level drops to the required level, the body begins to lose weight, fatigue, disability, etc.
When the hemoglobin in the blood increases, the blood becomes a good red color, and when the blood goes into the lungs during the blood flow in the body and we inhale the oxygen in that breath, the blood receives and gets excited.
Then as the blood travels around the body, it converts the waste products into carbon dioxide and returns to the lungs.
Then the excitement turns into blood flow and energizes the body.
It also absorbs the nutrients in the food we eat into the bloodstream and delivers them to many glands in the body, directing them to produce the fluids the body needs.
A person's hemoglobin level in the blood must be above 15 mg to be healthy.
Normally children should have 16 to 18 milligrams of "hemoglobin" in the blood, men 12 to 14 milligrams and women 10 to 14 milligrams.
The doctor's recommendation is to keep the hemoglobin level in the blood below ten milligrams.