Russia

Russia

 



ரஷ்யா பற்றிய தகவல்கள்

🇷🇺ரஷ்யா உலகின் மிகப்பெரிய நாடு மற்றும் 14 நாடுகளுடன் எல்லையாக உள்ளது. மிக நீண்ட எல்லை சீனாவுடன் பகிரப்பட்டுள்ளது.

🇷🇺ரஷ்யாவின் மிக உயரமான மலை 5,642 மீ / 15,510 அடியைக் கொண்ட எல்ப்ரஸ் மலை (Mount Elbrus) ஆகும்.

🇷🇺வோல்கா (Volga) நதி ரஷ்யா மற்றும் ஐரோப்பாவின் மிக நீளமான நதி ஆகும். இது 3,530 கிமீ / 2,190 மைல்கள் கொண்டது.

🇷🇺ரஷ்யாவின் மிகப் பெரிய அருங்காட்சியகம்,தி ஹெர்மிடேஜ் (The Hermitage).

🇷🇺உலகின் ஆழமான ஏரி பைக்கால் ஏரி (Lake Baikal) ஆகும். ரஷ்யர்கள் இதை சைபீரியாவின் நீலக்கண் (Blue Eye of
Siberia)என்று குறிப்பிடுகின்றனர்.

🇷🇺1867 ஆம் ஆண்டில்7.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அலாஸ்காவை ரஷ்யாவிடமிருந்து அமெரிக்கா வாங்கியது.

🇷🇺அழுக்கு காரை ஓட்டுவது ரஷ்யாவில் ஒருகுற்றச் செயலாகும்.

🇷🇺ரஷ்ய கூட்டமைப்பு ஒன்பது நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது. 

🇷🇺ரஷ்யாவின் கால் பகுதி மரங்களால் மூடப்பட்டுள்ளது.

🇷🇺ரஷ்யா பரப்பளவில் உலகின் மிகப்பெரிய நாடாகும்

🇷🇺ரஷ்யா புளுட்டோவை விட பெரியது. 

🇷🇺ரஷ்யாவின் 77 சதவிதம் நிலப்பகுதியை சைபீரியா கொண்டுள்ளது.


🇷🇺ரஷ்யா (Russia) அல்லது இரசியா என்பது வடக்கு யூரேசியாவில் அமைந்துள்ள உலகிலேயே நிலப்பரப்பில் யாவற்றினும் மிகப்பெரிய நாடாகும். இந்நாட்டின் முறைப்படியான பெயர் ரஷ்யக் கூட்டமைப்பு என்பதாகும். 

🇷🇺தமிழில் இரசியா, இரச்சியா என்றும், ரஷ்யா என்னும் பெயர்களாலும் குறிக்கப்படுகிறது.

 🇷🇺ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களின் பெரு நிலப்பரப்பில் மிகவிரியும் ஒரு பெரும் நாடாக விளங்கும் இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 17,075,200 சதுரக் கிலோமீட்டர். பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியலைப் பார்த்தால், ரஷ்யாவின் பரப்பளவு அடுத்த பெரிய நாடான கனடாவின் நிலப்பரப்பைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமாகும்.

🇷🇺 ரஷ்யா, மக்கள்தொகை அடிப்படையில் உலகில் எட்டாவது இடம் வகிக்கிறது. 

🇷🇺ஏறத்தாழ 143-145 மில்லியன் மக்கள் (2002ன் கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 145,513,037) இந்நாட்டில் வாழ்கிறார்கள்.

🇷🇺 ஏறக்குறைய வட ஆசியா முழுவதையும் மற்றும் 40% ஐரோப்பா பகுதிகளையும் உள்ளடக்கியது. 

🇷🇺11 விதமான கால வேறுபாடுகளை (Time zone) யும், பரந்த வேறுபட்ட நிலப்பரப்பையும் கொண்டது. 

🇷🇺ரஷ்யா உலகிலேயே அதிகமான அளவு காட்டு ஒதுக்கங்களைக் (8,087,900 ச. கிமீ) கொண்டுள்ளதுடன், இங்குள்ள ஏரிகள் உலக நன்னீர் நிலைகளின் பரப்பளவில் நான்கில் ஒரு பாகமாகவும் உள்ளன.

🇷🇺உலகின் மிகக் கூடிய கனிம வளங்களும் ஆற்றல் வளங்களும் ரஷ்யாவிலேயே உள்ளதுடன்உலகின் மிகப் பெரிய எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நாடாகவும் விளங்குகிறது. 

🇷🇺ரஷ்யா பின்வரும் நாடுகளுடன் தன் நில எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது (வடமேற்கிலிருந்து தென்கிழக்கு முகமாக): நோர்வே, பின்லாந்து, எஸ்டோனியா, லத்வியா, லித்துவானியா, போலந்து, பெலாரஸ், உக்ரைன், ஜார்ஜியா, அசர்பைஜான், கசகஸ்தான், சீனா, மங்கோலியா மற்றும் வட கொரியா ஆகும். 

🇷🇺மாஸ்கோ ரஷ்யா வின் தலைநகரமாக விளங்குகிறது.


Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Russia


 Russia is the largest country in the world and borders 14 countries. The longest border is shared with China.


 The highest mountain in Russia is Mount Elbrus at 5,642 meters / 15,510 feet.


 The Volga River is the longest river in Russia and Europe. It has a range of 3,530 km / 2,190 miles.


 The Hermitage is Russia's largest museum


 The deepest lake in the world is Lake Baikal. The Russians refer to it as the Blue Eye of Siberia.


 The United States purchased Alaska from Russia in 1867 for $ 7.2 million.


 Driving a dirty car is a crime in Russia.


 The Russian Federation has nine time zones.


 A quarter of Russia is covered by trees.


 Russia is the largest country in the world by area


 Russia is bigger than Pluto.


 Siberia covers 77 percent of Russia's land area.


Russia is the largest landmass in the world, located in northern Eurasia. The official name of the country is the Russian Federation.


 In Tamil it is also referred to as Russia, Russia and Russia.


  It is one of the largest continents in Asia and Europe, covering an area of ​​17,075,200 square kilometers. If you look at the list of countries by area, Russia's area is twice the area of ​​the next largest country, Canada.


 Russia ranks eighth in the world in terms of population.


 Approximately 143-145 million people (population 145,513,037 according to the 2002 census) live in the country.


 It covers almost the whole of North Asia and 40% of Europe.


 It has 11 time zones and a wide variety of terrain.


 Russia has the largest forest reserve in the world (8,087,900 sq km), and its lakes cover about a quarter of the world's freshwater bodies.


 Russia has some of the world's largest mineral and energy resources and is the world's largest producer of oil and natural gas.


 Russia shares its land borders with the following countries (from northwest to southeast): Norway, Finland, Estonia, Latvia, Lithuania, Poland, Belarus, Ukraine, Georgia, Azerbaijan, Kazakhstan, China, Mongolia and North Korea.


 Moscow is the capital of Russia.



Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.