World Heritage Sites of Sri Lanka

World Heritage Sites of Sri Lanka


 


இலங்கையின் 8 உலகப் பாரம்பரியத் தளங்கள் இவைதான்

இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல்,பண்பாட்டு (யுனெஸ்கோ) நிறுவனத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளது.அவை முறையே

 World Heritage Sites of Sri Lanka


1. அனுராதபுரம்


இது இலங்கையின் வடமத்திய பகுதியிலுள்ள ஒரு புராதன நகரமாகும். கி.மு. 4ம் நூற்றாண்டு முதல் 11ம் நூற்றாண்டு வரை தலைநகராக விளங்கியதாக நம்பப்படுகின்றது. பெளத்தர்களால் இந்நகர் புனித பூமியாகப் போற்றப்படுகின்றது. 


2.பொலன்னறுவை 


இது இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள ஓர் புராதன நகரமாகும். கி.பி 10 நூற்றாண்டு தொடக்கம் கி.பி 13 நூற்றாண்டு வரை பண்டைய இலங்கையின் தலைநகராக விளங்கியது. இது இரண்டாவது புராதன இலங்கை இராச்சியமாகும்.இங்கு பசுமையான சூழலும் புராதன கட்டிடங்களும், பராக்கிரம சமுத்திரமும் காணப்படுகின்றது.


3.சீகிரியா


சீகிரியா மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. 1144 அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்திரங்கள் பல உள்ளன. இக்கோட்டையை முதலாம் காசியப்பன் (கி.பி. 477-495) அமைத்துத் தலைநகராக்கினான்.சீகிரியா இலங்கையில் அதிகம் பார்வையாளர்களால் வரலாற்று இடம் எனும் சிறப்பைப் பெற்றது


4.சிங்கராஜ வனம். 


இது ஓர் பாதுகாக்கப்பட்ட தேசிய வனமாகும். சிங்கராஜக் காடு சபரகமுவா, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனம் கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் தொடக்கம் 1170 மீட்டர் உயரம் கொண்ட அயன மண்டல மழைக்காடாகும்.

இலங்கை உள்ளூர் பறவைகள் இருபத்தியாறு வகைகளில் 20 இங்கே காணப்படுகின்றன. 


5.கண்டி


கண்டி இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று.இங்குள்ள தலதா மாளிகை இலங்கையின் புகழ் பெற்ற பௌத்த ஆலயம் ஆகும். பெளத்த சமயத்தவர்களால் புனிதப் பண்டமாக மதிக்கப்படுகின்ற புத்தரின் புனிதப் பல் இங்கே உள்ளதாகப் பெளத்தர்களால் கருதப்படும் காரணத்தால் இது புனித தந்த தாது ஆலயம் எனவும் அழைக்கப்படுகின்றது. 


6.காலி


காலி இலங்கையிலுள்ள பெரிய நகரங்களுள் ஒன்றும்,தென் மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் நகரமுமாகும். இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான காலித் துறைமுகமும் இங்கே அமைந்துள்ளது.இங்கு 1588 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரால் முதலில் கட்டப்பட்டு, பின்னர் ஒல்லாந்தரால் 1649 ஆம் ஆண்டுக்குப் பின்னான காலப்பகுதியில் அரணாக்கப்பட்ட காலிக் கோட்டை உள்ளது.


7.தம்புள்ளை பொற்கோவில் 


 தம்புள்ளை பொற்கோவில் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில் ஆகும். இங்கு 153 புத்தரின் சிலைகளும், 3 அரசர்களின் சிலைகளும், 4 தெய்வ சிலைகளும் காணப்படுகின்றன.இது இலங்கையில் மிகவும் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டுள்ள குகையும், பெரிய குகை கோயிலும் ஆகும்.


8.இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் 


இது இலங்கையில் எட்டாவதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உலக பாரம்பரியத் தளம் ஆகும். இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளான சிகரக் காட்டு வள சரணாலயம், ஹட்டன் சமவெளி தேசிய வனம், நக்கிள்ஸ் மலைத்தொடர் என்பனவற்றை உள்ளடக்கிய பகுதியாகும்.இங்குள்ள மழைக் காடுகள் கடல் மட்டத்திலிருந்த 2,500 மீட்டர் (8,200 அடி) உயரத்தில் அமைந்துள்ளன.



Translate (Google translater)

These are the 8 World Heritage Sites of Sri Lanka

 It is listed by the United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)

 World Heritage Sites of Sri Lanka



 1. Anuradhapura


 It is an ancient city in the north central part of Sri Lanka. BC It is believed to have been the capital from the 4th century to the 11th century. The city is revered as a holy land by the Buddhists.


 2. Polonnaruwa


 It is an ancient city in the North Central Province of Sri Lanka. It was the capital of ancient Ceylon from the 10th century AD to the 13th century AD. This is the second ancient kingdom of Sri Lanka.


 3.Sigiria


 Sigiriya is located close to Dambulla town in Matale district. At 1144 feet high, the hill has a number of 6th century paintings with beautiful carvings. The fort was established by Kasiyappan I (477-495 AD) as the capital.


 4. Singaraja Forest.


 It is a protected national forest. Singarajak Forest is located in the lowland wetlands of Ratnapura, Galle and Matara districts on the border of Sabaragamuwa and Southern Provinces. Singaraja Forest is a tropical rainforest with an elevation of 300 m above sea level and 1170 m above sea level.

 20 of the twenty-six species of native birds of Sri Lanka are found here.


 5.Kandy


 Kandy is one of the important cities in the Central Province of Sri Lanka. It is also known as the Temple of the Sacred Ivory because the sacred tooth of the Buddha, which is revered by Buddhists, is believed to be here.


 6.Galle


 Galle is one of the largest cities in Sri Lanka and is located in the Southern Province. The port of Khalid, one of the most important ports in Sri Lanka, is also located here.


 7. Dambulla Golden Temple


  Dambulla Gold Temple is a cave temple located in the Matale district of the Central Province. There are 153 statues of Buddha, 3 statues of kings and 4 statues of deities. This is one of the best preserved caves and the largest cave temple in Sri Lanka.


 8. Central hills of Sri Lanka


 It is the eighth recognized World Heritage Site in Sri Lanka. The Central Highlands of Sri Lanka include the Peak Wildlife Sanctuary, the Hutton Plains National Forest and the Knuckles Range. The rainforest is located at an altitude of 2,500 meters (8,200 ft) above sea level.



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.