விமானங்கள் பற்றி அறிந்திராத பல சுவாரஸ்யங்கள்
1903ம் ஆண்டு ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானமானது *120 அடி தூரம்* பயணித்தது.
ஆனால், தற்போது வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் *போயிங் 777* உள்ளிட்ட விமானங்கள் ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் *அதிகபட்சமாக 15,844 கிமீ தூரம்* வரை பயணிக்கும் திறன் படைத்தது.
சர்வதேச அளவில் *ஆங்கிலம்தான்* விமானப் போக்குவரத்துத் துறையின் *பொதுவான மொழியாக* பேசப்படுகிறது. பைலட்டுகள், விமானங்களை கட்டுப்படுத்தும் பணியாளர்களுக்கு *ஆங்கில புலமை* என்பது அடிப்படைத் தகுதிகளில் ஒன்று.
விமானக் கட்டுப்பாட்டு கோபுரத்தின் கண்ணாடி ஜன்னல்கள் மேலிருந்து கீழ் நோக்கி *15 டிகிரி சாய்மானத்தில்* அமைக்கப்பட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். *சூரிய வெளிச்சம்* , *விளக்கு வெளிச்சத்திலிருந்து* வரும் பிரதிபலிப்புகளை குறைப்பதற்காக இந்த முறையில் ஜன்னல்கள் அமைக்கப்படுகின்றது.
விமானத்தில் *பாதரசம் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.* விமானத்தின் பல பகுதிகள் அலுமினியத்தில் தயாரிக்கப்பட்டிருப்பதால், *பாதரசத்தால் அதிக பாதிப்படையும் அபாயம்* இருப்பதால் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
விமானப் பயணம் என்பது ஆபத்து நிறைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அமெரிக்காவில் *விமானத்தில் இறப்பவர்களின்* விகிதத்தையும், *காரில் பயணிப்பவர்களில் இறப்பவர்களின்* எண்ணிக்கையையும் வைத்து ஒப்பீடு செய்துள்ளனர்.
அதில், விமானத்தில் பறப்பவர்களில் *11 மில்லியன் பேரில் ஒருவருக்கு* விபத்தால் மரணமடையும் வாய்ப்பு இருக்கிறதாம். ஆனால், காரில் பயணிப்பவர்களுக்கு *5,000 பேரில் ஒருவர்* விபத்தில் சிக்கி உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
*இங்கிலாந்து* , *நார்வே* மற்றும் *சுவீடன்* நாடுகளை சேர்ந்த *பைலட்டுகளிடம்* ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஆய்வில் கருத்துக் கூறிய பைலட்டுகளில் பெரும்பாலானோர் *விமானம் பறக்கும்போது தூங்கிவிடுவதாக* தெரிவித்துள்ளனர். அத்துடன், கண் விழித்து பார்க்கும்போது உடன் இருக்கும் *துணை விமானியும் தூக்கத்தில்* இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை உலகம் முழுவதும் நடந்த விமான விபத்துக்களில் *80 சதவீதம்* அளவுக்கு விமானம் வானில் மேல் *எழுந்த 3 நிமிடங்களுக்கு* உள்ளாகவும், *தரை இறங்குவதற்கு 8 நிமிடங்கள்* முன்பாகவும் நடந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, விமானம் *டேக் ஆஃப்* செய்யும்போதும், *தரை இறங்கும்போதும்தான்* பெரும்பாலான விபத்துக்கள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
விமானத்தில் பயணிக்கும் *5 பேரில் ஒருவர் பறக்கும்போது அதிக பயத்துடன்* இருக்கின்றனர். இதற்கு *ஏவியோபோபியா* என்று குறிப்பிடப்படுகிறது.
விமான பைலட்டுகள் *பறக்கும் நேரத்திற்கு மட்டுமே கணக்கிட்டு சம்பளம்* வழங்கப்படுகிறது. விமானம் *தாமதமாக வரும்போது* காத்திருப்பது, விமானம் *தாமதமாக புறப்படுவது* , விமானம் *புறப்படுவதற்கு முன்னர்* இருக்கும் பணிகள் கணக்கில் கொள்ளப்படுவதில்லையாம்.
அவசர சமயங்களில் விமானத்தின் வெளியேறும் வழிக்கு *5 வரிசைக்கு அப்பால்* அமர்ந்திருப்பவர்களுக்கு விமானத்தை வெளியேறுவதில் சிக்கல் இருக்கிறதாம். அதாவது, *குறித்த நேரத்தில் அவர்களால் வெளியேறுவது* கடினம் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரத்தில், *90 வினாடிகளுக்குள்* விமானத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றும் வசதியுடன் *கதவுகள் அமைக்கப்பட வேண்டும்* என்பது சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையத்தின் விதி.
விமான விபத்துக்களில் *உயிரிழப்பவர்களைவிட* , விமானங்கள் வெளியிடும் *நச்சுப் புகையால் அதிகமானோர் உயிரிழப்பதாக* புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் *10,000 பேர்* விமானங்களிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
*கார்* , *டூ வீலர்* வாங்கும் பலர் எதிர்பார்க்கும் முக்கிய விஷயம், எவ்வளவு *மைலேஜ்* கொடுக்கும் என்பதே. அவ்வாறு, விமானத்திற்கு கணக்கிடும்போது *போயிங் 747* விமானமானது *ஒரு கேலனுக்கு 0.2 மைல் மட்டுமே* மைலேஜ் தரும். அதேநேரத்தில், அதிகபட்சமாக *550 பயணிகள் வரை* இந்த விமானத்தில் பயணிக்க முடியும் என்பதையும் பார்க்க வேண்டும்.
Translate
Many interesting things not known about airplanes
The plane, invented by the Wright brothers in 1903, flew * 120 feet *.
However, currently commercial aircraft, including the * Boeing 777 *, are capable of traveling up to a maximum of * 15,844 km * once fully refueled.
Internationally, * English * is the * common language * of the aviation industry. * English proficiency * is one of the basic qualifications for pilots and flight control personnel.
You will notice that the glass windows of the flight control tower are set at an angle of * 15 degrees * from top to bottom. The windows are set in this way to reduce the reflections from * sunlight * and * light *.
* Mercury is not permitted on board aircraft.
There is no alternative to the idea that air travel is risky. However, in the United States, they compare the * death toll on the plane * with the * death toll * in the car.
Of those, one in 11 million pilots are likely to die in an accident. However, it has been reported that car passengers are at risk of * one in 5,000 * being involved in an accident.
A study was conducted on * pilots * from * England *, * Norway * and * Sweden *. In it, most of the pilots who commented on the study said they * fell asleep * while the plane was flying. They also said that the * co-pilot who was with them when they woke up was also asleep *.
Statistics show that * 80% * of all plane crashes worldwide so far have taken place within 3 minutes * of the plane taking off * and * 8 minutes * before landing. That is, most crashes occur when the plane is * taking off * and * landing *.
One in 5 people who travel by plane are more fearful * when flying. This is referred to as * aviophobia *.
Airline pilots * are paid * calculated for flight time only. Waiting time for flight * late arrival *, flight * late departure *, pre-flight * departure * tasks are not taken into account.
In case of emergency, there is a problem in getting out of the plane for those who are sitting * outside the * 5 row * of the plane. That is, it is reported that * it is * difficult for them to leave * on time.
At the same time, it is the rule of the International Civil Aviation Authority that * doors must be set up * with the facility to evacuate everyone on board within * 90 seconds *.
Statistics show that * more people are killed * by toxic fumes emitted by planes than by * those who * die * in plane crashes. It is estimated that * 10,000 people * die each year from toxic fumes from planes.
The main thing that many people who buy a * car *, two-wheeler * expect is how much * mileage * it will give. Thus, when calculated for an aircraft, the * Boeing 747 * aircraft will give * mileage of only 0.2 miles per gallon *. At the same time, it should be noted that a maximum of * 550 passengers * can travel on this flight.
எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)
எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.