Coma

Coma


 

♍ ஆழ்மயக்கம்  (Coma=கோமா) என்பது வலியை ஏற்படுத்தும் தூண்டல்களுக்கோ,  ஒளி, அல்லது ஒலிக்கோ எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல் இருப்பதுடன், தன்னிச்சையாக எந்தவொரு இயக்கத்தையோ / செயலையோ செய்ய முடியாமல், சாதாரணமாக உறங்கி, விழித்திருக்கும் வட்டத்தை இழந்து, ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக, உணர்வுகளை இழந்து, விழித்தெழச் செய்ய முடியாத நிலையில் தொடரக்கூடிய ஒரு மருத்துவ  நிலைமையைக் குறிக்கும்.


♍ஆனாலும் கிளாஸ்கோ ஆழ்மயக்க வரையறையின்படி (Glasgow Coma Scale) குழப்பத்திலுள்ளவர்களையும் மிதமான ஆழ்மயக்கத்தில் உள்ளவர்களாகக் கொள்ளலாம்.


♍ இந்த ஆழ்மயக்கமானது,  உணர்விழந்த நிலை, உணர்விழந்த மயக்க நிலை, செயலிழந்த மயக்க நிலை, நினைவற்ற நிலை என பலவகையாக அழைக்கப்படும். 


♍ இது ஆங்கிலத்தில் கோமா  (Coma) என அழைக்கப்படும். 


♍ கோமா என்பது ஆழ்ந்த உறக்கத்தைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான *κῶμα (coma)* என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்.


♍ இந்த ஆழ்மயக்கமானது பல்வேறு காரணங்களால் ஏற்படும்.


♍ இக்காரணிகள்  மைய நரம்பு மண்டலத்தில்  பாதிப்பை ஏற்படுத்தும் போது இந்நிலைமை தோன்றும்.


♍ விதிமுறைகளை மீறிய, தவறான போதைப் பொருள் பாவனை, தவறான அல்லது அளவுக்கதிகமான மருந்துகளின் பாவனை போன்றவற்றால் ஏற்படும் நச்சூட்டுப் பாதிப்பு; வளர் சிதைமாற்றத்தில் ஏற்படும் அசாதாரண நிலைகள்; மைய நரம்பு மண்டல நோய்கள்; பக்கவாதம்,குடலிறக்கம்,  இரத்தச் சர்க்கரைக் குறைவு  போன்றவற்றால் ஏற்படும் தீவிரமான நரம்பியல் பாதிப்புகள்; வாகன விபத்து, உயரத்திலிருந்து விழுதல் போன்ற நிலைமைகளில் ஏற்படும் பேரதிர்ச்சிப் பாதிப்புகள் போன்றன ஆழ்மயக்கத்திற்கான காரணங்களாக அமைகின்றன.


♍ சிலசமயம், மூளையில் பேரதிர்ச்சி ஏற்பட்ட நிலையில், மூளையின்தொழிற்பாட்டை பாதுகாப்பதற்காகவும், சில நோய் நிலைகள், அல்லது காயங்களின் தாக்கத்தால் ஏற்படும் வலி அதிகமாக இருக்கும் வேளையில், அளவுக்கு மீறிய வலியிலிருந்து நோயாளியைப் பாதுகாப்பதற்காகவும், சில மருத்துவ சிகிச்சை  முறைகளின் தீவிரத்தன்மையை நோயாளி தாங்க முடியாமல் இருக்கும் எனும்போதும், திட்டமிட்டு, சில குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்தி, இவ்வகையான ஆழ்மயக்கத்திற்கு நோயாளி கொண்டு செல்லப்படுவதும் உண்டு.


*பொதுவாக ஆழ்மயக்கத்திற்கு உட்பட்ட ஒரு நோயாளி...👇👇*


⚛️ தன்னிச்சையாக கண்களை திறக்க முடியாமல் இருப்பார்.


⚛️வழமையான உறக்கம் / விழிப்பு வட்டத்தின்படி செயற்பட முடியாமல் இருப்பார்.


⚛️ பெரிய வலிகளுக்கு எதிர்வினையாற்றாமல் இருப்பார்.


⚛️ பேச்சுத் தூண்டல்களுக்கும் செவி சாய்க்காதிருப்பார்.


⚛️ கிளாஸ்கோ ஆழ்மயக்க வரையறையின்படி 3 - 8 நிலையில் இருப்பார்.



Translate

Hypnosis (coma = coma) is a condition in which a person does not react to any stimuli, light, or sound that causes pain, and is unable to perform any movement / action on his or her own, loses normal sleep, loses his or her circle of awakening, and remains unconscious for more than six hours. Indicates medical condition.


 னHowever, according to the Glasgow Coma Scale, those with confusion can also be considered moderately deep.


 This state of unconsciousness is variously known as unconsciousness, unconsciousness, unconsciousness, unconsciousness.


 This is called a coma in English.


 ♍ Coma is derived from the Greek word * κῶμα (coma) *, meaning deep sleep.


 This deepening can occur for a variety of reasons.


 This condition occurs when these factors affect the central nervous system.


 Toxicity caused by illegal, illicit drug use, misuse or overdose; Abnormal conditions in growth degeneration; Central nervous system diseases; Severe neurological effects such as stroke, hernia, hypoglycemia; Traumatic events, such as a car accident or falling from a height, can be a cause for concern.


 ழ் Sometimes, in the event of a concussion, the patient may not be able to withstand the severity of certain medical treatments, such as deliberate use of certain medications, in order to protect the brain function, and to protect the patient from excessive pain when certain conditions, or trauma, cause severe pain. There is also patient transportation.


 * Usually a patient undergoing deep anesthesia ... 👇👇 *


 Will not be able to open eyes spontaneously.


 Will not be able to function according to regular sleep / wake circle.


 Will not react to major pain.


 Will not listen to speech stimuli.


 Glasgow will be in the 3 - 8 position according to the deepening definition.



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.