கல்வி பொது தராதர உயர்தர மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இதற்கமைய, கல்வி பொது தராதர உயர்தர மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சை மத்திய மாகாணத்தில் எதிர்வரும் ஐந்தாம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,கல்வி பொது தராதர உயர்தர மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சையை பிற்போடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பரீட்சைகள் இடம்பெறும் குறித்த தினத்தன்று,பாடசாலைகளில் நவராத்திரி பூசை இடம்பெறவுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பரீட்சை நடைபெறும் தினம்
இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதி குறித்த பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இது தொடர்பில் மத்திய மாகாணத்தின் சகல வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
O/L, A/L பரீட்சைக்கு உள்ள நாட்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள
எவ்வாறு நேரத்தை தினமும் அறிந்து கொள்வது?