Snake venom

Snake venom



General knowledges

 

பாம்பின் விஷம் எந்த நிறத்தில் இருக்கும்?

இளம் மஞ்சள் நிறம்



விளக்கம்

பாம்பின் விஷம் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.


விஷத்திற்கு நஞ்சு என்ற பெயரும் உண்டு.


உயிரியலைப் பொறுத்தவரை, நஞ்சு என்பது, உயிரினங்களுக்கு கெடுதியை அல்லது அல்லது இறப்பைக்கூட ஏற்படுத்தக்கூடிய பொருளாகும். 


ஓர் உயிரினத்தினால் போதிய அளவில் உள்ளெடுக்கப்படும் போது, மூலக்கூற்று மட்டத்தில் நிகழும் வேதியியல் தாக்கத்தினால் அல்லது வேறு செயற்பாடுகளினால் இவ்வாறான கேடுகள் ஏற்படுகின்றன.


நச்சியலின் (toxicology) தந்தை எனப்படுகின்ற பராசெலசு (Paracelsus) என்பார், எல்லாமே நஞ்சுதான் என்றும், நஞ்சு எல்லாவற்றிலும் உள்ளது என்றும் கூறினார். 


ஒரு பொருளை எவ்வளவு உள்ளெடுக்கிறோம் என்பதில் தான் அது நஞ்சா இல்லையா என்பது தங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


மருத்துவத் துறையிலும், விலங்கியலிலும், உயிரியற் செயற்பாடுகளினால் உருவாகும் நஞ்சு (toxin), பாம்புக்கடி போன்ற கடிகளினால் உடலுக்குள் செலுத்தப்படும் நஞ்சு (venom) என்பவை பொதுவான நஞ்சு (poison) என்பதிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன.


மனித வரலாற்றில், கொலை, தற்கொலை, மரண தண்டனை போன்றவற்றுக்கு நஞ்சு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.



⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️


🐍பறக்கும் பாம்புகளை எங்கு காணலாம்?

🌍ஜாவா


விளக்கம்

பறக்கும் பாம்புகளை ஜாவா தீவில் மட்டுமே காணலாம். 


பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். 


முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. 


இவை கால்கள் அற்றவையெனினும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகர வல்லவை.


சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை. 


பாம்புகளில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. 


இந்தியாவிலே 230 வகையான பாம்பினங்கள் உள்ளன.


இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை. 


🪶பாம்பின் தோலானது செதில்களால் சூழப்பட்டிருக்கும். 


குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இவை தங்கள் தோலை உரித்து விடுகின்றன.


பாம்பிற்கு காது மடல் இல்லை..



English translation

(Google translate app)


What color is the venom of the snake?

 Light yellow color


 Description

 The venom of the snake is found in the young yellow color.

 Poison also has the name poison.


 Biologically, poison is a substance that can cause harm or even death to living things.


 When ingested adequately by an organism, such damage is caused by chemical impact at the molecular level or by other activities.


 The father of toxicology, Paracelsus, said that everything is poison and that poison is in everything.


 He noted that how much we ingest an substance depends on whether it is poisonous or not.


 In medicine and zoology, toxin produced by biological activity is differentiated from venom, which is injected into the body by snakebite-like venoms.


 In human history, poison has been used for murder, suicide, and the death penalty.



⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

Where can you find flying snakes?

java


 Description

 Flying snakes can only be found on the island of Java.


 The snake is a reptile.


 An animal with a long vertebrate body and a short head.


 Although they have no legs, they can move fast by pushing the ground with their body.


 Some snakes can swim well in water.


 There are more than 2,700 species of snakes.


 There are 230 species of snakes in India.


 About 50 of these species are poisonous.


 The skin of the snake is surrounded by scales.


 They peel off their skin once in a while.


 The snake has no ear lobe ..



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.