🌲மூங்கில் (Bamboo) புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.
🌲புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும்.
🌲சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கின்றன.
🌲இவற்றில் ஏறத்தாழ 1000 சிற்றினங்கள் உள்ளன.
🌲உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட இனவகை மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன.
🌲மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும்.
🌲மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
🌲இதன் அதிக அளவு பருமன் 1 சென்ட்டிமீட்டரிலிருந்து 30 சென்ட்டிமீட்டர் வரை இருக்கும்.
🌲மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு மரம்.
🌲ஒரே நாளில் 250 cm (98 in) கூட தக்க சூழ்நிலையில் வளருவதாகத் தாவரவியலாளர் கண்டறிந்துள்ளனர்.
🌲ஒரு மூங்கில் மரத்தின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அது 60 அடி உயரம் வரை வளரும் காலமே 59 நாட்கள்தான்.
🌲கடல் மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில்தான் மூங்கில் நன்றாக வளரும்.
🌲எனவே மலைச்சரிவுகளும், மிக வறண்ட பகுதிகளும் மூங்கில் வளர்வதற்கு ஏற்ற இடங்கள்👆👏👍
*_மீன்கள் என்று சொல்லாத இழுது மீன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...!!!_*
*_==•°==•°==•°==•°==•°==•°==•°_*
🐙 இழுதுமீன் (Jellyfish) அல்லது கடல் இழுதுகள் (Sea jellies) என்பது குழியுடலிகள் இனத்தைச் சேர்ந்த கடலில் வாழும் ஒரு உயிரினமாகும். இதனைச் சொறிமீன், கடல்சொறி எனவும் அழைப்பர்.
🐙 மீன் என்று பரவலாக அழைக்கப்பட்டாலும் இவை மீன் அல்ல.
🐙 இழுதுமீன்கள் கடல் மற்றும் பெருங்கடல் பகுதிகளில் மிகுதியாகக் காணப்படுகின்றது.
🐙 கடல் உயிரினங்களிலேயே அழகானதும் ஆட்பறிக்கக் கூடியதுமான உயிரினம் இழுதுமீன் ஆகும்.
🐙இவை கடலின் ஆழப்பகுதிகளில் தான் காணப்படும் என்று வரையறுக்கவியலாத அளவுக்குப் பரந்த நீர்நிலைகளில்காணப்படுகின்றன.
🐙 அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும்போது பார்வைக்கு மிக அழகான உயிரினமாகவும், கடற்பகுதிகளில் உலாவிக்கொண்டிருக்கும்போது மிகுந்த தீங்கு விளைவிக்கக்கூடிய உயிரினமாகவும் இருக்கின்றன.
🐙 இதுவரை 2000க்கும் மேற்பட்ட இழுதுமீன் சிற்றினங்கள் உலகில்அறியப்பட்டுள்ளன. இவை கடலின் ஆழத்திலும் உலவும் பண்புள்ளதால், இன்னும் இதன் ஏராளமான இனங்கள் அறியப்படாமல் இருக்கின்றன.