🚨உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பண்ணைகளில் ஒன்றாக சிங்கப்பூரில் நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய சக்தி பண்ணை (world's biggest floating solar panel farms) அமைக்கப்பட்டு நிறைவுசெய்துள்ளது. இதனை 2021 ஜூலை 14 அதிகாரப்பூர்வமாக பிரதமர் லீ ஹ்சியன் லூங் பார்வையிட்டுள்ளார்.
இது சிங்கப்பூரில் உள்ள தெங்கே நீர்த்தேக்கத்தில் (Tengeh Reservoir) மிதக்கும் ஒரு லட்சத்து இருபத்தி இரண்டாயிரம் சோலார் பனல்கள் மூலம் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 45 ஹெக்டேயர் பரப்பளவில் – சுமார் 45 கால்பந்து மைதானங்களுக்கு சமமானதாக அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மின் உற்பத்தி செய்வதற்காக தெங்கே நீர்த்தேக்கத்தின் மேல் 122,000 சோலார் பனல்கள் உள்ளன, அவை 25 ஆண்டுகள் அளவுக்கு செயற்படும்.
நிலக்கரிக்கு மாற்றாக சோலார் பனல்கள் மூலம் இங்கு நடைபெறும் மின் உற்பத்தியால் ஆண்டுக்கு 32 ஆயிரம் டன் கார்பன் வளிமண்டலத்தில் கலப்பது தடுக்கப்படுவதுடன் சிங்கப்பூரில் உள்ள ஐந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்க போதுமான மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
Translate
World'sThe world's largest floating solar panel farms have been set up and completed in Singapore, one of the largest solar power farms in the world. It was officially visited by Prime Minister Lee Hsien Loong on July 14, 2021.
It has started generating electricity with one lakh and twenty two thousand solar panels floating in the Tengeh Reservoir in Singapore. Covering an area of 45 hectares - equivalent to about 45 football fields.
There are 122,000 solar panels on top of the Coconut Reservoir to generate electricity in an environmentally friendly manner that will operate for 25 years.
Instead of coal, solar panels will generate 32,000 tons of carbon per year, which will generate enough electricity to run five drinking water treatment plants in Singapore, officials said.